சமீபகாலமாக கடலில் மீனவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்

சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, மீன்பிடி படகுகளில் Vessel Monitoring System (VMS) எனப்படும் கண்காணிப்பு கருவியை பொருத்துவது குறித்து அரசு மட்டத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
VMS என்பது கடலில் பயணிக்கும் மீன்பிடி படகுகளின் இயக்கம், இருப்பிடம், வேகம் மற்றும் பயண திசை ஆகியவற்றை செயற்கைக்கோள் மற்றும் GPS தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கும் முறைமையாகும். இந்த தொழில்நுட்பம் மூலம் கடலில் அவசரநிலைகள் ஏற்பட்டால் உடனடி உதவி வழங்குவதும், மீனவர்கள் காணாமல் போகும் சம்பவங்களை குறைப்பதும் சாத்தியமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த கருவிகளை மீனவர்கள் மானிய அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

















