சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்களை பொருத்திய சொகுசு ஜீப் வாகனம் ஒன்று கம்பஹா – கணேமுல்ல பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சொகுசு ஜீப் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கம்பஹா – கணேமுல்ல பகுதியில் உள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் உரிமையாளரிடமிருந்து இந்த சொகுசு ஜீப் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட சொகுசு ஜீப் வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக கணேமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


















