இலங்கைக்கான துருக்கி தூதுவர் டாக்டர் செமி லுட்ஃபு துர்குட்டை சந்தித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கலந்துரையாடியுள்ளார்.
துருக்கி தூதரகத்தில், தூதுவரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தற்போதைய சர்வதேச அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை ஒரு தொழில்முனைவு நாடாக உருவெடுக்கும் பயணத்தில் துருக்கி குடியரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் சர்வஜன அதிகாரத்தின் ஊடகச் செயலாளர் ஹசன் அல்அல்தீனும் கலந்துகொண்டுள்ளார்.


















