இலங்கை மத்திய வங்கி (CBSL), நிதி வணிகச் சட்டத்தின் கீழ் 6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களின் சொத்துக்களை விற்பனை செய்யவோ, மாற்றவோ அல்லது வேறு வகையில் கையாளவோ தடைவிதித்து முடக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தி நீடித்துள்ளது.
முடக்க உத்தரவுக்கு உட்பட்ட நிறுவனங்கள்:
*Kasagala Green Plantation (Private) Limited
*Ceylon Green Life Plantation (Private) Limited
*Singhe Capital Investment Limited
*Pro Shop Advertising Holdings (Private) Limited
*Athens International Education Centre (Private) Limited
*Eyon Lanka Investment & Film Production International Company (Private) Limited
கசகல கிரீன் பிளான்டேஷன் மற்றும் சிலோன் கிரீன் லைஃப் பிளான்டேஷன் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஏனைய நான்கு நிறுவனங்கள் சட்டவிரோதமாக நிதி வணிகத்தில் ஈடுபட்டதாகவும்/வைப்புகளைப் பெற்றதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

















