கடந்த வருடம் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் என கூறப்படும் ‘மித்தெனிய கஜ்ஜா’ என்ற விதானகமகே அருண பிரியந்த என்பவரின் மூத்த மகன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தங்காலை வலய குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது நண்பரின், வீரகெட்டிய – யக்கஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போல்ட்-எக்சன் (Bolt Action) 12 போர் ரகத்தைச் சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வீரகெட்டிய பொலிஸாரால் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவானால் சந்தேகநபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அத தெரணவுக்கு தெரிவித்துள்ளனர்.


















