உக்ரைன் மக்களிற்கு தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான சுதந்திரம் உள்ளது என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 தலைவர்கள் ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கான இராஜதந்திர தீர்வு உக்ரைனிய ஐரோப்பிய நலன்களை பாதுகாப்பதாக காணப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யுத்த நிறுத்தம் அல்லது மோதல்கள் குறைக்கப்பட்ட சூழமைவிலேயே அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகள் நிகழமுடியும் என தெரிவித்துள்ள அவர்கள் இராஜதந்திர தீர்வு உக்ரைன்; மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதாக காணப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஹங்கேரியை தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றியநாடுகளும் இதில் ஏற்றுக்கொண்டுள்ளன.
















