ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்த ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
இதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.1% உயர்ந்து, தற்போது 112.20 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அதேவேளையில், அமெரிக்காவின் WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 2.79% அதிகரித்து, 99.86 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.

















