இலங்கைக்குக் கடத்துவதற்காகப் படகில் கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த சுக்கு மற்றும் மஞ்சள் மா ஆகியவை தமிழகத்தில் இன்று அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தின் புதுமடம் கடற்கரைப் பகுதியில், புதுமடம் மரைன் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின்போது, பதிவெண் இல்லாத நாட்டுப் படகொன்றில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, 14 மூடைகளில் சுக்கும், இரண்டு மூடைகளில் மஞ்சள் மாவும் காணப்பட்டதாகத் தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

















