ஓமானில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் 15 வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விரான் சமுதித (Viran Chamuditha) அணியின் தலைவராகவும், செனுஜ வெகுணகொட (Senuja Wekunagoda) உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரெஹான் பீரிஸ், கித்ம விதானபதிரண, கிம்ஹான் ரசாஞ்சன, சனுல் வீரரத்ன, சனிரு சேனாரத்ன, லித்ம பெரேரா, விஷ்ணேஸ்வரன் ஆகாஷ், செத்மிக செனவிரத்ன, கிம்ஹான் மெண்டிஸ், லதேந்திர ஆகாஷ், ஹிமாரு தேஷான், ஸ்டீவன் பீரிஸ் மற்றும் கௌஷிக் குமாரசிங்க ( Rehan Peiris, Kithma Vithanapathirana, Kimhan Rasanjana, Sanul Weeraratne, Saniru Senaratne, Lithma Perera, Vishneswaran Akash, Sethmika Seneviratne, Kimhan Mendis, Lathendra Akash, Himaru Deshan, Steven Peiris, and Kaushik Kumarasinghe) ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை அணி எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி போட்டியில் பங்கேற்க ஓமானுக்குப் பயணிக்கிறது.
















