மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே!
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் மூலம் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக் கூடும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்த னையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுக்கான சூழ்நிலை கனிந்து வரக்கூடும். வியாபாரத்தில் பின்னடைவான நிலை மாறி, விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாளாக இருக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.


















