அநுராதபுரம் – ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் புனிதப் பகுதி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக தேரர்கள் கூடி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் அதனை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது அங்கு பொலிஸாருக்கும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
சத்தியாகிரக போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து அங்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


















