முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, அங்கு முன்னிலையான அவர், சுமார் 4 மணிநேரத்திற்கும் அதிக காலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வௌியேறியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.


















