மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே!
சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.


















