கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு
த.வெ.க நிர்வாகியை தமிழ்நாட்டு காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக இந்திய சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் த.வெ.க வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.
இதேவேளை தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.


















