பாலாவின் ‘பரதேசி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவரும்இ கார்த்தி- பா. ரஞ்சித் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவருமான நடிகை ரித்விகா கதையின் நாயகிகளுள் ஒருவராக நடித்திருக்கும் ‘முட்டாள் எழுதிய கதை’ எனும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பா. ஆனந்தராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முட்டாள் எழுதிய கதை’ எனும் திரைப்படத்தில் ரித்விகாஇ வினோதினி வைத்தியநாதன்இ ரிஷா ஜகோப்ஸ் இ மதுஇ வேலு பிரபாகரன்இ நாஞ்சில் சம்பத்இ டி எஸ் ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி ஜி. ராமசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோகன் இசையமைத்திருக்கிறார். பாலியல் சுரண்டலை எதிர்க்க முடியாமல் ஆத்திரமடையும் பெண்களை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை எடிசன் திரை ஆலயம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேணுகோபால் தயாரித்திருக்கிறார்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகியான ரித்விகா அர்த்தமுள்ள பார்வையுடன் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.















