செலான் வங்கி நெகிழ்வான நிதித் நிதித் தீர்வுகளை விரிவுபடுத்துவதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) வளர்ச்சியை ஆதரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டில் தொடர்ந்து பயணிக்கிறது.
வங்கி, தற்போது SMEகளிற்கு சூரிய மின்சக்தி மற்றும் தொழிற்பாட்டு மூலதனக் கடன்களை வழங்குகிறது. இது அவசர நிதி உதவி தேவைப்படும் வணிகங்களுக்கு முக்கிய நிதித் தெரிவுகளாக அமையும்.
செலான் வங்கியின் சூரிய மின்சக்திக் கடன்கள் SMEகளுக்கு மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை வணிக முதலீடாக ஏற்றுக்கொள்வதற்கான நெகிழ்வான நிதித் தெரிவை வழங்குகின்றது.
செலானின் சூரிய மின்சக்திக் கடனுடன், SMEகள் தங்கள் வணிகங்களை மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் நடாத்திச் செல்வதுடன் வணிகங்களால் ஏற்படும் கார்பன் தடயத்தின் தாக்கத்தைக் குறைத்து நிலைத்தன்மையை ஊக்குவிக்கலாம்.
நாட்டின் நிலைபெறுதகு எரிசக்தி ஆற்றல் இலக்குகளுக்கு பங்களிக்கும் அதே வேளை இந்த முயற்சி SMEகளின் நிதி நம்பகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது எரிசக்தி செலவுகள் மற்றும் கார்பன் தடம் ஆகியவற்றைக் குறைப்பதற்கான தெரிவுகளை ஆராயும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்ற திட்டமாகும்.
செலானின் சூரிய மின்சக்திக் கடன்கள் தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகளின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவும்.
இந்த துறைகள் சூரிய மின்சக்தி கடன் திட்டத்தில் இருந்து ரூ.100 மில்லியன் வரையிலான கடன்களை நெகிழ்வான நிதி தெரிவுகளுடன் பெறலாம்.
கடன் பெறுநர்கள் முதல் ஐந்து வருடங்களுக்கு, வருடத்துக்கு 11.0% என்ற நிலையான வட்டி வீதத்தை தெரிவு செய்யலாம்.
அதனைத் தொடர்ந்து மீதமுள்ள இரு வருடங்களுக்கு 9.0% என்னும் கீழ் எல்லை வட்டி வீதத்துடன் ஒரு மாத AWPLR+1.0% (சராசரி எடையுள்ள பிரதம கடன் விகிதம்) என்ற வட்டி வீதத்தை தெரிவு செய்யலாம். நிதி நன்மைகளை வழங்கும் வகையில் திருப்பிச் செலுத்தும் காலம் ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.