ஓன்லைன் வர்த்தகம் எளிமையாக்கப்பட்ட பிறகு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல தொழில் முனைவோர்கள் தங்களுக்கென பிரத்யேக செயலியை வடிவமைத்து அதனை சந்தைப்படுத்துகின்றனர்.
இவர்கள் தொழில் நடத்தும் நிலவியல் பகுதியை கடந்து, (தோராயமாக 200 வாடிக்கையாளர்கள் முதல் 2000 வாடிக்கையாளர்கள் வரை ) அதனை சுற்றியுள்ள 20 கிலோமீற்றர் தொலைவு வரை உள்ள மக்களுக்கு ( 2000 வாடிக்கையாளர்கள் முதல் 7000 வாடிக்கையாளர்கள் வரை) வணிக ரீதியான சேவையை வழங்க இயலுகிறது.
இத்தகைய சேவையின் மூலம் தொழில் விருத்தி அடைந்து லாபமும் அதிகரிக்கும். ஆனால் இதனை செய்வதற்கு முன் திட்டமிட வேண்டும். தகவல் தொழில்நுட்ப அறிவு வேண்டும்.
இவற்றையெல்லாம் விட ஆண்டவனின் அனுக்கிரகம் வேண்டும். இதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை மேற்கொண்டால் தொழிலில் வெற்றியடையலாம் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
முதலில் உங்களுக்கு உங்களின் வீட்டிற்கு அருகே இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வியாழக் கிழமைகளில் காலை 6:00 மணி முதல் ஏழு முப்பது மணிக்குள்ளாக ஒரே ஒரு அச்சு வெல்ல கட்டியை விநாயகருக்கு பக்கத்தில் வைத்து விடுங்கள்.
அத்துடன் தொழிலில் விருத்தி அடைவதற்காக நான் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் தொடர்ந்து 48 நாட்கள் நெய் தீபம் ஏற்றி வைத்து, சக்கரத்தாழ்வாரை வலமிருந்து இடமாக பன்னிரண்டு முறை வலம் வந்து பிரார்த்திக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து மேற்கொண்டு வரும்போது நீங்கள் விரும்பியபடி தொழிலை விருத்தி செய்து, அதனூடாக லாபத்தை எளிதாக பெற இயலும்.