மேஜர் லீக் போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் 37 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசினார்.
சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 41 ஓட்டங்கள்
புளோரிடாவில் நடந்த போட்டியில் சியாட்டல் ஒர்கஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ அணிகள் மோதின.
முதலில் ஆடிய சான் பிரான்சிஸ்கோ அணி 5 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 41 (28) ஓட்டங்களும், ஜேக் பிரேசர்-மெக்கர்க் 35 (22) ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய சியாட்டல் ஒர்கஸ் அணியில் ஷயான் ஜஹாங்கிர் 36 (27) ஓட்டங்கள் விளாசினார்.
ஸ்டீவன் டெய்லர் (0), கைல் மேயர்ஸ் (3), சிக்கந்தர் ரஸா (11) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஹெய்ன்ரிச் கிளாஸனும் 5 ஓட்டங்களில் அவுட் ஆக, சியாட்டல் அணி 5 விக்கெட்டுக்கு 89 ஓட்டங்கள் என தடுமாறியது.
ஹெட்மையர் சிக்ஸர் மழை
அப்போது அதிரடியில் இறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer) சிக்ஸர் மழை பொழிந்தார்.
அரைசதம் அடித்த அவர் 37 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் சியாட்டில் ஒர்கஸ் (Seattle Orcas) அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.