'தமிழ் பேசும் மக்களின் குரல்'

About Us

இலங்கையில் குறிப்பாக வடக்கு மாகாணத்திலுள்ள முன்னணி தமிழ் நாளிதழ்களில் ஒன்று யாழ்.தினக்குரல். வடமாகாணத்திலுள்ள முன்னணி அச்சு மற்றும் இணையவழி ஊடக நிறுவனங்களில் ஒன்றான யாழ்.தினக்குரல் நோர்தேண் பப்பிளிக்கேஷன் பிறைவேற் லிமிட்டெட்டுக்கு சொந்தமானதாகும்.

யாழ்.தினக்குரல் பத்திரிகை 2002-03-15ம் திகதி யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த தீவகம் வேலணையில் பிறந்த தொழிலதிபர் எஸ்.பொன்னுச்சாமி (எஸ்.பி.சாமி) அவர்களால் உருவாக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது உரிமை மறுப்புக்கு எதிரான குரலாக யாழ்.தினக்குரல் வடக்கு மாகாணத்தில் தனது காலடியை பதித்தது.

ஊடக அடக்குமுறை மிக உச்சத்தில் இருந்த காலச்சூழலில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை பல சவால்களை கடந்து வெளிப்படுத்தியிருந்தோம்.

எமது நீண்ட பயணத்தில் தமிழ் மக்கள் எம்மோடு இணைந்து பயணிக்கும் வேளையில் காலமாற்றத்திற்கு அமைய அவர்களிடம் தகவல்களை வேகமாகவும் நேர்த்தியாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு யாழ்.தினக்குரல் இணைய வழியில் கால் பதிப்பதையிட்டு உவகையுறுகிறோம்.

‘தமிழ் பேசும் மக்களின் குரல்’ 

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.