-இ.கலைஅமுதன்-
எரிபொருள் விநியோகத்திற்கு ஞசு நடைமுறையை மீண்டும் அமுல்ப்படுத்துமாறு வடமாகாண அதிபர் சங்கத்தினர் யாழ்.மாவட்டச் செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கடித்த்தில், வடக்கில் தற்போது எரிபொருள் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன் நீண்ட வரிசை மற்றும் ஒழுங்கின்மை ஆகியன, பொதுமக்களுக்கும், அரச ஊழியர்களுக்கும், அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
எரிபொருளுக்காக 3 அல்லது 4 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்கும் அவல நிலையே தொடர்ந்து வருகிறது.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளைச் நிறைவேற்ற எரிபொருள் அவசியமாகவுள்ளது. எனவே, எரிபொருள் விநியோகத்தைச் சீரமைத்து தேவைக்கேற்ப நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க QR குறியீட்டு நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அன்புடன் கோருகின்றோம் இக் கோரிக்கையைக் கருணையுடன் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்றுள்ளது.
















