இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் படிப்படியாக ஆரம்பிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, டிசம்பர் 4ம் தேதி முதல் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வட – மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளைப் பொதுமக்கள் கவனமாகக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
















