காலி – தங்கெதர பகுதியில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றின் அதிபரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 7 பெற்றோரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் பெண்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த அதிபர், சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஒரு விவகாரமே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.


















