-அமைச்சரவை தீர்மானம்-
2026 ஆம் ஆண்டுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்காக விண்ணப்பித்திருந்த 48 நிறுவனங்களின் தகுதிகளை ஆராய்ந்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில், அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இந்தக் கொள்வனவுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


















