நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த தொடர்ச்சியான அனர்த்த சூழ்நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அண்மைய தகவல்களின்படி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் மற்றும் கடும் வானிலை காரணமாக 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
565 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 20,271 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் வானிலை சீரடைந்து வந்தாலும், 233,015 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது 1,441 பேர் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


















