-ஐ.தே.க.முன்னாள் உறுப்பினர் கைது-
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகளை மோசடியாகப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினரொருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.
கைதின் போது சந்தேகநபரிடமிருந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு கடிதத் தலைப்புகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் நிழற்பட பிரதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் பலவற்றை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 11 நபர்களிடமிருந்து 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும்,பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


















