-மத்திய வங்கி தகவல்-
நடப்பாண்டின் செப்டெம்பர் மாதம் இறுதியாகும் போது அரசாங்கம் செலுத்தவேண்டிய மொத்த அரச கடன் 29,67,500 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் நிறைவில் இலங்கை அரசு செலுத்தவேண்டியிருந்த மொத்தக் கடன் தொகை 28,73,870 கோடி ரூபாவாக இருந்துள்ளது.
அதற்கமைய, இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கை அரசு செலுத்தவேண்டியுள்ள மொத்தக் கடன் 93,630 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இந்த வருடம் செப்டெம்பர் மாதம் இறுதியாகும்போது அரசு செலுத்தவேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன் தொகை 10,97,434 கோடி ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருட இறுதியில் அரசு செலுத்தவேண்டியிருந்த வெளிநாட்டுக் கடன் தொகை 10,42,904 கோடி ரூபாவெனத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் அரசு செலுத்த வேண்டியுள்ள மொத்தக் கடன் தொகை 54,530 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த வருடம் செப்டெம்பர் மாத நிறைவில் மொத்த தேசிய கடன் தொகை 18,70,146 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருட இறுதியில் அரசு செலுத்த வேண்டியிருந்த மொத்த தேசியக் கடன் தொகை 18,30,966 கோடி ரூபாவாகும்.
அதற்கமைய, இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் அரசு செலுத்த வேண்டியிருந்த மொத்த தேசிய கடன் தொகை 39,180கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


















