-புல் கட்டுகளை தொங்கவிட்ட அரச ஆதரவாளர்கள்-
நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் ‘எருமைகள் மட்டுமே’ கலந்துகொள்ளும் என்று கூறி, தெஹிவளை மற்றும் கொ{ஹவலவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் அரசாங்க ஆதரவு குழுக்கள் புல் கட்டுக்களை தொங்கவிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, இதுபோன்ற செயல்களும், பேரணி நடைபெறும் இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை அகற்றுவதும் கட்சியை பலவீனப்படுத்தாது என்று கூறினார்.
புத்தரை மேற்கோள் காட்டி, அவர்கள் கொடுப்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்களே அதை ஏற்றுக்கொண்டு அனுபவிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















