-வெளிவிவகார அமைச்சர் விஜித-
அவசர காலச்சட்டத்தால் தவறுகள் நடக்காது என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இயற்கை அனர்த்த நிலைமையின் போது, அவசரகால சட்டத்தை அமுல்படுத்திய முறைமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அஜித.;பி. பெரேரா கேள்வியெழுப்பினார்.
அவசரகால நிலைமையை அமுல்படுத்துமாறு எதிர்க் கட்சியினரும் வலியுறுத்தினார்கள். அதற்கமைவாகவே அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டது. இந்த அவசரகால சட்டம் 1959 ஆம் ஆண்டு பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் இடர் நிலைமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே அவசரகால சட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆவசரகாலச் சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் நிறைவேற்றப்படும். அதனைத் தொடர்ந்து அது சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரமே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே தவறான நிலைமை கள் தோற்றம் பெறாது. தவறுகள் எதுவும் நடக்காது என்றார்.
















