-இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஸ்மன் எதிரிசிங்க-
டித்வா சூறாவளி பேரழிவை அடுத்து விடுக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு அமைய இரத்ததானம் செய்ததற்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி நன்றி தெரிவித்துள்ளது.
நேற்று ஊடகங்களிடம் தெரிவித்த தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் மருத்துவர் லக்ஸ்மன் எதிரிசிங்க, மூன்று நாட்களுக்குள் 20,000 க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்துள்ளதாகக் கூறினார். தினசரி 1500 இரத்ததானம் தேவை என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தேவையான அளவை விட அதிகமாக கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய இரத்த இருப்பு அடுத்த 15 நாட்களுக்கு போதுமானது. இதனால் தேசிய இரத்த வங்கியின் செயற்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


















