அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 20/20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவதற்காக இந்தஅணி இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

இந்த அணி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரத்திலிருந்து நேற்றைய தினம் இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
20/20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் செப்டெம்பர் 20, 21, 24, 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















