அஸ்வெசும சலுகைகளை பெறுபவர்கள் வெட்கப்படவேண்டும். அது ‘சட்டபூர்வமான பிச்சை’ என அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வறுமை ஒழிப்பில் நீண்டகால நலத்திட்டங்களை சார்ந்திருக்கக்கூடாது. மாறாக நிலையான தீர்வுகளை கண்டறிவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
அஸ்வெசும பயனாளிகள் வெட்கப்பட வேண்டும். இது சட்டபூர்வமாக பிச்சை எடுப்பது போன்றது. நாம் ஒரு தேசமாக வளர விரும்பினால், இந்த சார்பு மனநிலையிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். அஸ்வெசும திட்டத்தை காலவரையின்றி தொடரவோ அல்லது அதை அரசியல் முழக்கமாகப் பயன்படுத்தவோ அரசாங்கம் விரும்பவில்லை.
ஒரு தெளிவான திட்டம் மற்றும் திட்டத்தின் மூலம் அஸ்வெசுமவை முடிவுக்குக் கொண்டுவருவதே இலக்காக இருக்கவேண்டும். இந்த மானியம் இனி இல்லாத நாளைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைவேன், இருப்பினும் இந்த செயல்முறை பெறுநர்கள் மீது திணிக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டார்.
வறுமை எப்போதும் இருக்குமா, அல்லது அதை எதிர்த்துப் போராடி முன்னேறுவோமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்? என்று அமைச்சர் கூறினார்.


















