கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரபந்தாட்ட சங்க 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் மூன்றாம் நாளான நேற்று கிர்கிஸ்தானை 3 நேர் செட்களில் இலங்கை அபார வெற்றியீட்டியது.
முதலாவது செட்டில் 25 – 19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டாவது செட்டில் 27 – 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மூன்றாவது செட்டின் கடைசிக் கட்டத்தில் புத்திசாதுரியத்துடன் விளையாடி இலங்கை 25 – 22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று போட்டியை 3 – 0 என்ற நேர் செட்களில் கைப்பற்றியது.


















