ஆழிப்பேரலையின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், சர்வமத நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளது.
சுனாமி மற்றும் பிற பேரழிவுகளில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தேசிய பாதுகாப்பு தினமான இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணிவரை தீவு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், இலங்கையில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர், மேலும் பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 26 ஆம் திகதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு தினம் என்று அறிவிக்கப்பட்டு, சுனாமி மற்றும் பிற பேரழிவுகளில் இறந்த அனைவரையும் பொதுமக்கள் பங்கேற்புடன் நினைவு கூர்கிறது.
இதேவேளை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுனாமி பேரழிவால் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல்கள் சுனாமி நினைவாலங்களில் நடத்தப்படவுள்ளது.


















