-செ.ரவிசாந்-
இணுவில் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் பெரிய பிரித்தானியா அறிவு அறக்கட்டளையின் அனுசரணையில் முழுநிலாக் கலையரங்கம் நிகழ்வு பூரணை நாளான நாளை புதன்கிழமை மாலை 5 மணி முதல் இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் சிறுவர்கள் பங்குகொள்ளும் சிறப்புப் பண்ணிசைப் பாடல்கள் மற்றும் கதாப் பிரசங்க நிகழ்வுகள் நடைபெறும். அத்துடன் விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பும், செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ‘தேவை’ குறுநாடகம் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.


















