இணையவழி மோசடிகள் மூலம் ஏற்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இணையவழி மோசடிகள் மூலமாக சுமார் 28 சிறுவர்களும், 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் சைபர்ஸ்பேஸ் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் 2024 ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் மூலம் 375 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 பேர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.


















