இலங்கையின் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு 38000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எக்ஸ் தளம் ஊடாக நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
மத்திய கிழக்கு மோதல் காரணமாக இலங்கை சந்தித்துவரும் எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன்.
அதனைத் தொடர்ந்து, இந்தியா 38000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியுள்ளது. விரைவான அந்த ஆதரவுக்கு நன்றி. மேலும், நெருங்கிய ஒருங்கிணைப்புக்காக டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து நடைபெற்றுவரும் மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட எரிபொருள் விநியோகத் தடைகளைச் சரிசெய்வதில், இலங்கைக்கு இந்தியா விரைவான ஆதரவை வழங்கியுள்ளது. காலம் தவறாத இந்த உதவிக்கு ஜனாதிபதி நன்றி கூறினார்.


















