இந்தியாவில் இருந்து பெருந்தொகை கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி வந்த கும்பலைச் சேர்ந்த 8 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெங்களுரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் அடங்குவார்.
ஆந்திர–ஒடிசா எல்லைப் பகுதிகளில் விளையும் கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் ஸ்ருகாவரம் கிராமம் அருகே கும்பலை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 74 கிலோ உலர் கஞ்சா, ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட கும்பல் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


















