இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் சொகுசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 57 பயணிகள் பயணித்துள்ளனர்.
ஜோத்பூர் – ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகளில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய மதிப்பில் தலா 2 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்றும் இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்.


















