-அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு-
இராமஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்கு தேவையில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும கருத்து வெளியிட்ட அவர், இராமஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதையில் எமக்கு உடன்பாடில்லை எனினும் இராமர் பாலத்தை சென்று மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.


















