இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர், இந்தியா-இலங்கை உறவுகள் மற்றும் தற்போதைய அபிவிருத்தி நிலைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


















