இந்திய கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ். தரங்கினி இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளது.
இன்று முதல் மார்ச் 2 வரை திருகோணமலை துறைமுகத்தில் கடற்படைசார் நடவடிக்கைகளில் அக்கப்பல் ஈடுபடவுள்ளது.
மேலும் இந்தக் கப்பல் மார்ச் 6 மீண்டும் கொழும்புக்கு வருகைதரவுள்ளதோடு 9 ஆம் திகதி வரை அங்கு தரித்து நிற்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
துறைமுகம் மற்றும் கடல்சார் விடயங்களில் இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் படகோட்டம் பயிற்சி அளிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.


















