-கஜிந்தன்-
கடந்த மாதம் 28 ஆம் திகதி நெடுந்தீவுக் கடலில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 பாண்டிச்சேரி மீனவர்களின் வழக்கு விசாரணையும், கடந்த 9 ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 பாண்டிச்சேரி மீனவர்களின் வழக்கு விசாரணையும் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்குகளை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீனவர்கள் 29 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















