இந்த ஆண்டு ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 5,000 கோடிக்கும் அதிகமாகும். ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1,37,000 க்கும் அதிகமாகும். மேலும் இந்தப் போதைப்பொருள் கையிருப்பு 1,40,000 க்கும் மேற்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















