இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை தரவுகள் குறிப்பிடுகின்றன.
இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,224,577 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 43,200 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 24 கரட் தங்கப் பவுண் 345,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்க கிராம் 39,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 316,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 37,800 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 302,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















