உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை 4 இலட்சம் ரூபாவை கடந்துள்ளது.
அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு, புறக்கோட்டை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 379,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 410,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.


















