-ஞானத்தமிழ்-
இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள வெளி இணைப்பு இயந்திர பொறிவலர் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
6 மாத காலத்தைக் கொண்ட இப்பயிற்சி நெறியை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக கற்க முடியும். பயில விரும்புவோர் எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கற்கை நெறிக்கான விண்ணப்பங்களை “www.ocu.ac.lk” என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடிவதுடன், மேலதிக விபரங்களை 021 2226251 அல்லது 0776182056 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

















