இலங்கை இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இராணுவக் கொடிகளுக்கு ஸ்ரீ தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெறும் விழா கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தலைமையில் நடைபெற்றது.
இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



















