-நாமல் ராஜபக்ச எம்.பி-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் போர் வெற்றியைப் பற்றிப் பேச ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தைரியம் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று அவர் உரையாற்றுகையிலேயே மெற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
உலக நாடுகள் தங்கள் சுதந்திர தினங்களில் படைப்பிரிவுகள் மற்றும் பிரிவுகளின் வெற்றிகளைப் பற்றி பெருமையாகப் பேசுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் வெற்றிகள் கூட பேசப்படுகின்றன.
இந்நிலையில் சுதந்திர தின உரையில் டித்வா சூறாவளியின் போது ஆயுதப்படைகளின் பங்களிப்பு பற்றி ஜனாதிபதி பேசியிருந்தார்.இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வீரர்களின் வெற்றிகளைப் பற்றிப் பேச அவருக்கு தைரியம் இல்லையென்பது தெரிகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி இனவெறி என்று அரசாங்கம் நினைத்தால், அது அப்படியல்ல. நாங்கள் தமிழ் சமூகத்திற்கு எதிராகப் போராடவில்லை என்றார்.


















