குருநாகல், தம்பாடிய பிரதேசத்தில் கடை ஒன்றின் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. தளபாடங்கள் தயாரிக்கும் கடை ஒன்றின் உரிமையாளரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 40, 45 மற்றும் 46 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற இராணுவச் சிப்பாய் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















