-விளான் சந்திப் பகுதியில் சம்பவம்-
-கஜிந்தன்-
விளான் சந்தி பகுதியில் இரு குழுவினருக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.
விளான் சந்தி பகுதியில் பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே மோதல் நடைபெற்றிருந்த நிலையில் இந்த இ;ருவர் சார்பாகவும் அங்கு வந்த இரண்டு குழுவினருக்கிடையே பின் மோதல் இடம்பெற்றது.
இந்த மோதலில் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை மோதல் இடம்பெற்ற வேளை அங்கு வந்த பொலிஸார் ஒருவரை கைது செய்ததையடுத்து மோதலில் ஈடுபட்ட ஏனையோர் தப்பிச் சென்றனர்.
கைதான சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


















